உலகக் கோப்பையில் அயர்லாந்து ஆட்டத்தின் போது கில்கிறிஸ்ட் விட்ட கொட்டாவியை உலகக்கோப்பை போட்டிகள் குறித்த கில்கிறிஸ்டின் விமர்சனமாகவும் சிலர் எடுத்துக் கொள்கிறார்கள். அல்லது ஒருவேளை மனிதர், இதுபோல் ஏதும் நினைத்திருப்பாரோ?
தினசரி சச்சின் பத்தி நியூஸ் வருது. கங்குலி, யுவராஜ், தோனி, அட நம்ம சேப்பல் பத்தி கூட டெய்லி நியூஸ் வருது. ஆனாக்க, நம்ம கேப்டன் டிராவிட் பத்தி மட்டும் நியூஸ் எதுவுமே தலைகாட்ட மாட்டேங்குதே. ஒருவேளை பங்களாதேஷ் டூருக்கு கடுமையா ஹோம்வொர்க் பண்றாரோ.(!!!) ----- 'சீனியர் பிளேயருங்க தான் தோல்விக்கு காரணம்'ங்கறாரு சேப்பல். இருக்கறதே 3 பேரு தான். சச்சின், கங்குலி, டிராவிட். கங்குலி வேர்ல்டு கப் சமயத்துல நல்லா வெளயாடிட்டாரு. டிராவிட் கேப்டன். அப்ப மீதி இருக்கறதே சச்சின் மட்டும் தான். 'அப்ப சச்சின் தான் தோல்விக்கு காரணம்'னு சொல்றதுக்கு தான் இப்படி சுத்தி வளைக்கறாரோ. ம்...சச்சின்னா சேப்பலும் நடுங்குவார் போலிருக்கு. அது......... ----
டிராவிட் அண்ணா, பங்களாதேஷ் ஆட்டத்துல நல்ல வெளயாண்ட பங்களாதேஷ் வீரர்களுக்கு நீங்க பேட் (+PAT) கொடுத்து பாராட்டுனது தெரிஞ்சு, இந்திய ரசிகர்களைப் பத்தி தெரியல, ஆனா பங்களாதேஷ் ரசிகர்களெல்லாம் ஒங்க மேல ரொம்ப பாசமாயிட்டாங்களாம். பத்து வருஷம் கழிச்சு நீங்க ரிட்டயர் ஆனாலும் ஒடனே ஒங்களுக்கு பங்களாதேஷ் கோச்சாகிற வாய்ப்பு காத்திட்டிருக்கு. (ஜாம்மி, இது போன்ற ரசிகர்கள் இருக்கற வரைக்கும், கிரிக்கெட்ல ஒன்ன யாரும் அசைச்சுக்க முடியாது, அசைச்சுக்க முடியாது). நீங்க மனசு வெச்சா, ஒங்க ஃபிரெண்டு கும்ப்ளேக்கு இப்பவே கூட அந்த டீம்ல பௌலிங் கோச்சுக்கு ரெகமண்ட் பண்ணலாம். (பிற உலக அணி பேட்ஸ்மேன்களே, நோட் பண்ணுங்கடா, நோட் பண்ணுங்கடா). -----
இன்னா கைஃபு சார், 'என்ன வுட்டுட்டு வெஸ்ட் இண்டீஸ் போனிங்கள்ள, மவனே நல்லா வாங்கிக் கட்டினீங்களா, என்னமோ நான் மட்டும் தான் நல்லா வெளயாடாத மாதிரி சீன் போட்டு என்னை டீமை விட்டுத் தூக்கினிங்களே, கடவுள் கள்ளாட்டைக்கு நல்லா உள்ளாட்டை கொடுத்தாரா, பழிக்குப் பழி வாங்குன மாதிரியும் ஆச்சு, புதுசா கட்டுன என் வூடும் சேதாரத்துல இருந்து எஸ்கேப் ஆச்சு'னு மனசுக்குள்ளேயே நக்கல் வுடறீங்களாமே. இது நியாயமா சார். ---
அண்ணே, பங்களாதேஷ் கிட்ட தோத்து இந்தியா வெளில வந்துருச்சு. அயர்லாந்துகிட்ட தோத்து பாகிஸ்தான் வெளில வந்துருச்சு. இப்ப, நான் கேக்கற முக்கிய கொஸ்டின் என்னான்னா, இந்தியா பாகிஸ்தான் ரெண்டு டீம்ல எது 'ஸ்டிராங்கான டீமு' அப்படின்னு டிசைட் பண்ணிக்க வேண்டாமா. ரெண்டு டீமும் இப்ப சும்மா தான இருக்கு. மத்த டீமுங்க வேற வோர்ல்டு கப்புல பிஸியா கீது. ஸோ, இவங்க ரெண்டு பேருக்குள்ளே ஒரு போட்டி நடத்தி 'யாரு பெட்ரு பிளேயரு'ன்னு தீர்மானிச்சு வெச்சுக்கறது தானேன்ணே நல்லது. ----
அகார்கர் சார், அது எப்டி சார் அது, யார் கேப்டனா வந்தாலும், யார் கோச்சா வந்தாலும், ஒங்க தெறம மேல மட்டும் அப்டி ஒரு நம்பிக்கை வெச்சுற்ராங்க. இத்தனக்கும் நீங்க அப்டி ஒண்ணும் பிரமாதமா விக்கெட் கூட எடுக்கறதில்லயே. பொடி கிடி வெக்கிறீகளோ. 'சீனியர் பிளேயர்ங்க தான் தோத்ததுக்கு காரணம்'னு சொல்றவக கூட ஒங்களக் கண்டுக்க மாட்றாகளே. ஸோ, நேயர்களே ஒங்களுக்கு இந்த வார எஸ்எம்எஸ் கொஸ்டின் என்னன்னா, 'அகார்கருக்கு கிரிக்கெட் உலகின் ----- ' என பட்டம் தரலாம்.
இந்த கேள்விக்கு மேல இருக்க 4 ஆப்ஷன்ல ஒன்ன தேர்ந்தெடுத்து எங்களுக்கு அனுப்புங்க. பரிசு என்னன்னா, அகார்கர் ஒங்களுக்கு 20 ஓவர் பவுலிங் போடுவாரு. அட, அதுக்குள்ளே செஞ்சுரி கனவா, மொதல்ல ஆன்ஸர் பண்ணுங்கப்பா..... ----
டிராவிட் சார், மேட்டரு தெரியுமா ஒங்களுக்கு, ரவி சாஸ்திரி 'கேப்டன் தான் பாஸ்'னு சொல்லியிருக்காரு. 'டீமோட ஒரிஜினல் ஸ்டெரெந்த்' தெரிஞ்சு 'கேப்'ல எஸ்கேப் ஆகிறதுக்காகத் தான் இப்படி ஒரு ஸ்டேட்மென்ட் கொடுத்திருக்காருன்னு நெனக்கிறேன். 'சேப்பல் போயிட்டாரு, இனிமேல் நாம சுதந்திரமான கேப்டனா இருக்கலாம்'னு ஏமாந்திறாதீங்க. பழியப் பூராவும் ஒங்க மேல தூக்கிப் போட்றுவாங்க. நீங்க ஒடனே 'கோச்சும் தான் பாஸ்'னு அறிக்கை உட்ருங்க. அப்ப தான் நீங்க சேஃபாக முடியும். ----
(பி.கு. இவை முன்பே எழுதப்பட்டவை என்றாலும் கோப்பை போட்டிகள் நிறைவுற்ற பின் போட்டால் ரசிக நண்பர்கள் மனவேதனை தவிர்த்த முழு நகைச்சுவை உணர்வோடு எடுத்துக் கொள்ள முடியும் என்பதால் தான் வெளியீட்டில் தாமதம். தொடர்ந்து கிரிக்கெட் அதிகமாக வருவதற்கும் அதுவே காரணம்.)
"நான் யாரு எனக்கே தெரியலயே...... அதைக் கேட்டா நான் சொல்ல வழியில்லயே...."
(குரல் பிரபல கிரிக்கெட் பிளேயரைப் போல் இருக்க, நெருங்கிப் பார்த்தால் நம்ம இர்பான் பதான்)
சார், நீங்களா
வாழ்க்கையே ஒரே குழப்பமா இருக்கு சார், ஒங்களுக்காவது தெரியுமா, நான் யாருன்னு
நீங்க பதான்
அதான் எனக்குத் தெரியுமே. இன்ஃபாக்ட் அது மட்டும் தான் எனக்கு இப்ப உறுதியா தெரியுது. நான் கேட்டது நான் பவுலரா, பேட்ஸ்மேனா இல்ல ஆல்ரவுண்டரான்னு உங்களுக்காவது தெரியுமான்னு கேட்டேன்.
நீங்க பவுலராத் தானே வந்தீங்க
பவுலராத்தான் வந்தேன். ஆனா எனக்கு நல்ல பேட்டிங் திறமையும் இருக்குனு சொன்னாங்களே.
சீச்சி....சும்மா அவர் பேக்கை தூக்கிச் சுமக்கறதுக்கெல்லாமா டிப்ஸ் கேப்பாங்க
நான் பவுலிங் டிப்ஸை சொன்னேன் சார்
ஓ... அதைச் சொல்றீங்களா.....அவர் என்ன சொல்றாரு, கையை இப்படி வளைங்க அப்படி வளைங்கங்கிறாரு. கண்ட மாதிரி நான் கையை வளைச்சு நின்னதப் பார்த்து ஒரு பிரேக் டான்ஸர் நல்ல பழக்கமாயிட்டான். பேசாம அப்படியே பிக்கப் ஆயி பிரேக் டான்ஸரா போயிடலாமான்னு யோசிக்கறேன். ஆனா அங்கயும் கோச் தொல்லை இருக்கும்கிறாங்க.... பார்க்கலாம்.
(வந்தவர் யோசிக்கிறார்) பவுலராத்தான் வந்தாரு.....பவுலிங் எனக்கு வருமான்னு கேக்கறாரு. பவுலிங் போட்டாத்தான் நான் ஆல்ரவுண்டரான்னும் கேக்கறாரு...ஆமா, ஃபிளின்டாப் கூட சில மேட்ச் பேட்டிங் மட்டும் பிடிச்சு பவுலிங் போடாமத் தான் இருக்காரு. அதுக்காக அன்னிக்கு மட்டும் அவர் ஆல்ரவுண்டர் இல்லன்னா அர்த்தம்..... மேலும் மேலும் ஒரே குழப்பமாவே இருக்கே....
....ஒரேயடியாக் குழப்பறீங்களே சார்
என்னைப் பார்க்கிற உங்களுக்கே இவ்வளவு குழப்பமா இருக்கே.... நானாவே இருக்க எனக்கு எவ்வளவு குழப்பமா இருக்கும்... கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க...
(இன்னொருவர் 'அட, நம்ம இர்பான் தம்பி மாதிரி இருக்கே' என்று அருகில் வர, வந்தவர் யோசித்தவாறே நகலத் துவங்குகிறார்.)
--- ஏன்டா...நானும் கேக்கறேன்... மும்பை மட்டும் தான் இந்தியாவில இருக்கா.... 25 மாநிலம் இருக்கு.... எல்லா ஊர்லயும் கிரிக்கெட் நடந்துகிட்டு தான் இருக்கு. அப்புறம் ஏன்டா மும்பையை மட்டுமே வெளம்பரப்படுத்தறீங்க.
----இங்க பாரு தம்பி, உனக்கு ஏன் இந்த விளம்பரம், நீ எடுக்கிற 1, 2 விக்கெட்டுக்கு இது தேவைதானா...நீ இந்த மாதிரி வெளம்பரத்துல செலுத்தற கவனத்தை வெளயாட்டுல செலுத்து... நாடு முன்ன மாதிரி இல்ல... ஆமா சொல்லிப்புட்டேன்...ஜனங்களே பார்த்துங்க, இந்த மாதிரி பாவத்துக்கு நான் ஆளாகவே மாட்டேன்.
டிரிங்.....டிரிங் ஆங்..தொகுப்பாளர் சார் நீங்க இதுவரைக்கும் எத்தனை இன்டர்நேஷனல் மேட்ச் ஆடியிருக்கீங்க
நானா
ஆமா 400 மேட்சாவது ஆடி உலக சாதனை படைக்கணும்கிற உயர்ந்த குறிக்கோளோட என்னோட 8 வயசிலேயே கிரிக்கெட் விளையாட ஆசைப்பட்டேன்.
....த்சூ.....த்சூ....த்சூ...
இதுக்கு ஏன் நாயைக் கூப்படறீங்க
...பீல் பண்றேன் சார்.....
....தேங்க்ஸ்
.... அன்னில இருந்து கிரிக்கெட் பேட் வாங்கறதுக்காக வாரம் ஒவ்வொரு ரூபாயா சேர்த்து வைக்க ஆரம்பிச்சேன். ம்...அந்த 250 ரூபாய் கிரிக்கெட் பேட் வாங்கறதுலேயே என்னோட 5 வருஷம் வீணாப் போயிடுச்சு.
....த்சூ.....த்சூ....த்சூ...
திரும்பவும் ஏன் நாயைக் கூப்படறீங்க
...திரும்பவும் பீல் பண்றேன் சார்.....
....திரும்பவும் தேங்க்ஸ்
..... ஆனா, என்னோட மன உறுதி கொஞ்சம் கூடக் கொறயல. கொறஞ்சது 200 மேட்சாவது ஆடி இந்த கிரிக்கெட் உலகத்திலே என்னோட பேரைப் பதிவு செய்யாம விடுறதில்லேன்கிற உறுதியோட தான் பயிற்சியை ஆரம்பிச்சேன்.
.....வெரிகுட் சார், உங்க மனஉறுதியை நான் பாராட்டறேன்
..... நீ நெனக்கிற மாதிரி அந்தப் பய நெனக்கலயே
.....யார் சார்
.....மொத மொதலா பந்து போடறதுக்கு ஒரு வெளங்காத பயலை கூட்டி வந்தேன். அவன் வரும்போது நான் ஸ்போர்ட்ஸ்மேன் தான்சார்னு சொன்னான். நான் அப்பவே என்ன ஸ்போர்ட்ஸ்டானு கேட்டிருக்கணும். விதி.... கேக்கலை.........அது ஏதோ ஜாவ்லின் த்ரோவாமே..... பய மொத பந்தயே குறிதவறாம எறிஞ்சுபுட்டான். அது படாத இடத்திலே பட்டு, ஆஸ்பத்திரிக்கு ஓடி, உயிர் பொழச்சுதே ஒம்பாடு எம்பாடுன்னு ஆயிடுச்சு. அதுல ஒரு 5 வருஷம் போயிடுச்சு.
....பாவம் சார் நீங்க
.... அப்படித் தான் இந்த சமுதாயமும் நெனச்சது. ஆனா நான் அப்படி நெனக்கலை. திரும்பி வருவேன். அம்பது மேட்சுன்னாலும் நச்சுனு ஆடி இந்த உலகத்தை திரும்பிப் பார்க்க வைப்பேன்னு நெனச்சேன். அதுக்கு வெறும் பயிற்சி மட்டும் போதாது. ஆள் பழக்கமும் வேணும்னு சொல்லிட்டு ஒரு செலக்டரை கரெக்ட் பண்ணி வைச்சிக்கணும்னு முடிவு செஞ்சேன்.
.....யூ மீன் கரப்ஷன்
...நோ..... அட்ஜஸ்ட்மென்ட்
.....(மறுமுனையில்...க்ர்ர்ர்...க்ர்ர்ர்ர்)
...(ஜகா வாங்கி).... என்னாச்சு
.... ஒண்ணுமில்ல சார்....தொண்டை கொஞ்சம் சரியில்ல.... சரி அந்த செலக்டர் என்ன சொன்னாரு
.... இப்ப செலக்ஷன் இல்லப்பா, வரும்போது நிச்சயம் ஒன்ன நான் கிரிக்கெட் பிளேயராக்குறேன்... அதுவரைக்கும் நீ கூடமாட இருந்து வீட்டு வேலைகளைப் பார்த்துக்கிட்டிரு....இப்ப வீட்டுக்கு கிணறு தோண்டறதா இருக்கோம்..அந்த வேலைகளைப் பாருன்னாரு.