டிரிங்.....டிரிங்
ஆங்..தொகுப்பாளர் சார் நீங்க இதுவரைக்கும் எத்தனை இன்டர்நேஷனல் மேட்ச் ஆடியிருக்கீங்க
நானா
ஆமா
400 மேட்சாவது ஆடி உலக சாதனை படைக்கணும்கிற உயர்ந்த குறிக்கோளோட என்னோட 8 வயசிலேயே கிரிக்கெட் விளையாட ஆசைப்பட்டேன்.
....த்சூ.....த்சூ....த்சூ...
இதுக்கு ஏன் நாயைக் கூப்படறீங்க
...பீல் பண்றேன் சார்.....
....தேங்க்ஸ்
.... அன்னில இருந்து கிரிக்கெட் பேட் வாங்கறதுக்காக வாரம் ஒவ்வொரு ரூபாயா சேர்த்து வைக்க ஆரம்பிச்சேன். ம்...அந்த 250 ரூபாய் கிரிக்கெட் பேட் வாங்கறதுலேயே என்னோட 5 வருஷம் வீணாப் போயிடுச்சு.
....த்சூ.....த்சூ....த்சூ...
திரும்பவும் ஏன் நாயைக் கூப்படறீங்க
...திரும்பவும் பீல் பண்றேன் சார்.....
....திரும்பவும் தேங்க்ஸ்
..... ஆனா, என்னோட மன உறுதி கொஞ்சம் கூடக் கொறயல. கொறஞ்சது 200 மேட்சாவது ஆடி இந்த கிரிக்கெட் உலகத்திலே என்னோட பேரைப் பதிவு செய்யாம விடுறதில்லேன்கிற உறுதியோட தான் பயிற்சியை ஆரம்பிச்சேன்.
.....வெரிகுட் சார், உங்க மனஉறுதியை நான் பாராட்டறேன்
..... நீ நெனக்கிற மாதிரி அந்தப் பய நெனக்கலயே
.....யார் சார்
.....மொத மொதலா பந்து போடறதுக்கு ஒரு வெளங்காத பயலை கூட்டி வந்தேன். அவன் வரும்போது நான் ஸ்போர்ட்ஸ்மேன் தான்சார்னு சொன்னான். நான் அப்பவே என்ன ஸ்போர்ட்ஸ்டானு கேட்டிருக்கணும். விதி.... கேக்கலை.........அது ஏதோ ஜாவ்லின் த்ரோவாமே..... பய மொத பந்தயே குறிதவறாம எறிஞ்சுபுட்டான். அது படாத இடத்திலே பட்டு, ஆஸ்பத்திரிக்கு ஓடி, உயிர் பொழச்சுதே ஒம்பாடு எம்பாடுன்னு ஆயிடுச்சு. அதுல ஒரு 5 வருஷம் போயிடுச்சு.
....பாவம் சார் நீங்க
.... அப்படித் தான் இந்த சமுதாயமும் நெனச்சது. ஆனா நான் அப்படி நெனக்கலை. திரும்பி வருவேன். அம்பது மேட்சுன்னாலும் நச்சுனு ஆடி இந்த உலகத்தை திரும்பிப் பார்க்க வைப்பேன்னு நெனச்சேன். அதுக்கு வெறும் பயிற்சி மட்டும் போதாது. ஆள் பழக்கமும் வேணும்னு சொல்லிட்டு ஒரு செலக்டரை கரெக்ட் பண்ணி வைச்சிக்கணும்னு முடிவு செஞ்சேன்.
.....யூ மீன் கரப்ஷன்
...நோ..... அட்ஜஸ்ட்மென்ட்
.....(மறுமுனையில்...க்ர்ர்ர்...க்ர்ர்ர்ர்)
...(ஜகா வாங்கி).... என்னாச்சு
.... ஒண்ணுமில்ல சார்....தொண்டை கொஞ்சம் சரியில்ல.... சரி அந்த செலக்டர் என்ன சொன்னாரு
.... இப்ப செலக்ஷன் இல்லப்பா, வரும்போது நிச்சயம் ஒன்ன நான் கிரிக்கெட் பிளேயராக்குறேன்... அதுவரைக்கும் நீ கூடமாட இருந்து வீட்டு வேலைகளைப் பார்த்துக்கிட்டிரு....இப்ப வீட்டுக்கு கிணறு தோண்டறதா இருக்கோம்..அந்த வேலைகளைப் பாருன்னாரு.
...அது ஒரு மூணு மாசம். தோண்டறோம் தோண்டறோம்...தண்ணி வருவனாங்குது. ரொம்ப கஷ்டப்பட வேண்டியதாப் போச்சு.
....அதுக்கப்பறமாவது கெடச்சுதா சார்
......கெடச்சுது, 400 அடியில, ஒரு வாளி தண்ணி
..... சார் நான் தண்ணியைக் கேக்கலை, ஒங்க கிரிக்கெட் சான்சைக் கேட்டேன்.
.....எங்கப்பா, ஓடியாடி ஒழச்சதுல ஒடம்பு இளச்சுப் போயி, செலக்ஷன் சமயத்துல ஃபிட்னஸ் இல்லனு எடுக்க மாட்டேன்னுட்டானுவ...ஆனாலும் இன்னி வரைக்கும் நான் மனசு தளரலே....
....த்சூ.....த்சூ....த்சூ...
...திரும்பவும் பீலிங்கா.....
.....இப்ப நான் நெஜமாவே நாயைக் கூப்பிட்டேன்
---எதுக்கு.....
---(கவுண்டமணி காட்சி..."இது ஒரு கதைன்னு சொல்லி கடை வியாபாரத்தைக் கெடுத்துட்டயடா நாயே.....)மவனே...இன்னொரு தடவ ஒன்ன இங்கே பார்த்தேன்....
...ஆத்தி... இது என்ன அக்கப்போரா இருக்கு.... ஏன்டா நான் ஒரு கிரிக்கெட் பிளேயர் ஆகணும்னு நெனச்சுது ஒரு குத்தமாடா? ரைட்ரா...
---------------------
Thursday, April 26, 2007
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
:)
வாழ்த்துக்கள்!
நன்றி சிபி.
அட அநியாயத்துக்கு நக்கல் அடிச்சுருக்கீங்க :)
சூப்பராயிருக்குது
நன்றி சென்ஷி.
nala irundchu machi
நன்றி அனானி, ஆனாலும் நீங்க ரொம்ப தாமதமாய் படித்திருப்பீர்கள் போலிருக்கிறது. திடீரென்று இந்த பதிவில் கமெண்ட் வரவும் எனக்கே ஆச்சரியம். பதிவு போட்டு சுமார் ஒரு வருடம் ஆகப் போகிறதல்லவா. எனினும், இது தான் நகைச்சுவையின் சிறப்பு என்று நினைக்கிறேன்.
Post a Comment