Monday, April 30, 2007

நக்கல் ராமசாமி

தினசரி சச்சின் பத்தி நியூஸ் வருது. கங்குலி, யுவராஜ், தோனி, அட நம்ம சேப்பல் பத்தி கூட டெய்லி நியூஸ் வருது. ஆனாக்க, நம்ம கேப்டன் டிராவிட் பத்தி மட்டும் நியூஸ் எதுவுமே தலைகாட்ட மாட்டேங்குதே. ஒருவேளை பங்களாதேஷ் டூருக்கு கடுமையா ஹோம்வொர்க் பண்றாரோ.(!!!)
-----


'சீனியர் பிளேயருங்க தான் தோல்விக்கு காரணம்'ங்கறாரு சேப்பல். இருக்கறதே 3 பேரு தான். சச்சின், கங்குலி, டிராவிட். கங்குலி வேர்ல்டு கப் சமயத்துல நல்லா வெளயாடிட்டாரு. டிராவிட் கேப்டன். அப்ப மீதி இருக்கறதே சச்சின் மட்டும் தான். 'அப்ப சச்சின் தான் தோல்விக்கு காரணம்'னு சொல்றதுக்கு தான் இப்படி சுத்தி வளைக்கறாரோ. ம்...சச்சின்னா சேப்பலும் நடுங்குவார் போலிருக்கு. அது.........
----

டிராவிட் அண்ணா, பங்களாதேஷ் ஆட்டத்துல நல்ல வெளயாண்ட பங்களாதேஷ் வீரர்களுக்கு நீங்க பேட் (+PAT) கொடுத்து பாராட்டுனது தெரிஞ்சு, இந்திய ரசிகர்களைப் பத்தி தெரியல, ஆனா பங்களாதேஷ் ரசிகர்களெல்லாம் ஒங்க மேல ரொம்ப பாசமாயிட்டாங்களாம். பத்து வருஷம் கழிச்சு நீங்க ரிட்டயர் ஆனாலும் ஒடனே ஒங்களுக்கு பங்களாதேஷ் கோச்சாகிற வாய்ப்பு காத்திட்டிருக்கு. (ஜாம்மி, இது போன்ற ரசிகர்கள் இருக்கற வரைக்கும், கிரிக்கெட்ல ஒன்ன யாரும் அசைச்சுக்க முடியாது, அசைச்சுக்க முடியாது). நீங்க மனசு வெச்சா, ஒங்க ஃபிரெண்டு கும்ப்ளேக்கு இப்பவே கூட அந்த டீம்ல பௌலிங் கோச்சுக்கு ரெகமண்ட் பண்ணலாம். (பிற உலக அணி பேட்ஸ்மேன்களே, நோட் பண்ணுங்கடா, நோட் பண்ணுங்கடா).
-----

இன்னா கைஃபு சார், 'என்ன வுட்டுட்டு வெஸ்ட் இண்டீஸ் போனிங்கள்ள, மவனே நல்லா வாங்கிக் கட்டினீங்களா, என்னமோ நான் மட்டும் தான் நல்லா வெளயாடாத மாதிரி சீன் போட்டு என்னை டீமை விட்டுத் தூக்கினிங்களே, கடவுள் கள்ளாட்டைக்கு நல்லா உள்ளாட்டை கொடுத்தாரா, பழிக்குப் பழி வாங்குன மாதிரியும் ஆச்சு, புதுசா கட்டுன என் வூடும் சேதாரத்துல இருந்து எஸ்கேப் ஆச்சு'னு மனசுக்குள்ளேயே நக்கல் வுடறீங்களாமே. இது நியாயமா சார்.
---

அண்ணே, பங்களாதேஷ் கிட்ட தோத்து இந்தியா வெளில வந்துருச்சு. அயர்லாந்துகிட்ட தோத்து பாகிஸ்தான் வெளில வந்துருச்சு. இப்ப, நான் கேக்கற முக்கிய கொஸ்டின் என்னான்னா, இந்தியா பாகிஸ்தான் ரெண்டு டீம்ல எது 'ஸ்டிராங்கான டீமு' அப்படின்னு டிசைட் பண்ணிக்க வேண்டாமா. ரெண்டு டீமும் இப்ப சும்மா தான இருக்கு. மத்த டீமுங்க வேற வோர்ல்டு கப்புல பிஸியா கீது. ஸோ, இவங்க ரெண்டு பேருக்குள்ளே ஒரு போட்டி நடத்தி 'யாரு பெட்ரு பிளேயரு'ன்னு தீர்மானிச்சு வெச்சுக்கறது தானேன்ணே நல்லது.
----

அகார்கர் சார், அது எப்டி சார் அது, யார் கேப்டனா வந்தாலும், யார் கோச்சா வந்தாலும், ஒங்க தெறம மேல மட்டும் அப்டி ஒரு நம்பிக்கை வெச்சுற்ராங்க. இத்தனக்கும் நீங்க அப்டி ஒண்ணும் பிரமாதமா விக்கெட் கூட எடுக்கறதில்லயே. பொடி கிடி வெக்கிறீகளோ. 'சீனியர் பிளேயர்ங்க தான் தோத்ததுக்கு காரணம்'னு சொல்றவக கூட ஒங்களக் கண்டுக்க மாட்றாகளே. ஸோ, நேயர்களே ஒங்களுக்கு இந்த வார எஸ்எம்எஸ் கொஸ்டின் என்னன்னா, 'அகார்கருக்கு கிரிக்கெட் உலகின் ----- ' என பட்டம் தரலாம்.

(a) ராமராஜன் (b) ரகுமான் (c) பிரேம் (d) ஏவிஎம் ராஜன்

இந்த கேள்விக்கு மேல இருக்க 4 ஆப்ஷன்ல ஒன்ன தேர்ந்தெடுத்து எங்களுக்கு அனுப்புங்க. பரிசு என்னன்னா, அகார்கர் ஒங்களுக்கு 20 ஓவர் பவுலிங் போடுவாரு. அட, அதுக்குள்ளே செஞ்சுரி கனவா, மொதல்ல ஆன்ஸர் பண்ணுங்கப்பா.....
----

டிராவிட் சார், மேட்டரு தெரியுமா ஒங்களுக்கு, ரவி சாஸ்திரி 'கேப்டன் தான் பாஸ்'னு சொல்லியிருக்காரு. 'டீமோட ஒரிஜினல் ஸ்டெரெந்த்' தெரிஞ்சு 'கேப்'ல எஸ்கேப் ஆகிறதுக்காகத் தான் இப்படி ஒரு ஸ்டேட்மென்ட் கொடுத்திருக்காருன்னு நெனக்கிறேன். 'சேப்பல் போயிட்டாரு, இனிமேல் நாம சுதந்திரமான கேப்டனா இருக்கலாம்'னு ஏமாந்திறாதீங்க. பழியப் பூராவும் ஒங்க மேல தூக்கிப் போட்றுவாங்க. நீங்க ஒடனே 'கோச்சும் தான் பாஸ்'னு அறிக்கை உட்ருங்க. அப்ப தான் நீங்க சேஃபாக முடியும்.
----

(பி.கு. இவை முன்பே எழுதப்பட்டவை என்றாலும் கோப்பை போட்டிகள் நிறைவுற்ற பின் போட்டால் ரசிக நண்பர்கள் மனவேதனை தவிர்த்த முழு நகைச்சுவை உணர்வோடு எடுத்துக் கொள்ள முடியும் என்பதால் தான் வெளியீட்டில் தாமதம். தொடர்ந்து கிரிக்கெட் அதிகமாக வருவதற்கும் அதுவே காரணம்.)

1 comment:

சென்ஷி said...

//இந்த கேள்விக்கு மேல இருக்க 4 ஆப்ஷன்ல ஒன்ன தேர்ந்தெடுத்து எங்களுக்கு அனுப்புங்க. பரிசு என்னன்னா, அகார்கர் ஒங்களுக்கு 20 ஓவர் பவுலிங் போடுவாரு. அட, அதுக்குள்ளே செஞ்சுரி கனவா, மொதல்ல ஆன்ஸர் பண்ணுங்கப்பா.....//

:)))